அனுபவம் பல்கலைக்கழகம் | கலையுகன் – 35ம் அணி
பத்து வருடம் கழி(ளி)த்த போதும்.
பள்ளி வாழ்க்கை கசக்கவில்லை
பாலைப்போல் பழகப் பழகப்
புளித்தும் போகவில்லை
வந்த ஒரு வருடத்திலே
சலித்து விட்டது பல்கலைக்கழகம்
கனவுகள் கண்டு வந்தேன்.
அது ஒரு சொர்க்கமென்று
தேவதைகள் கூட்டம் அலைமோத
பல வித ஆடைகள் மனதைக் கொள்ளையிட
முதல் நாளே தெரிந்துவிட்டது.
அவை எதுவும் இங்கில்லை என்று
கற்பனையில் மட்டும் தான் வாழ வேண்டும்
கற்பனை உலகில் பலவித வடிவங்கள்
ஒவ்வொன்றும் ஒருவிதமாய்
சில bore அடித்தன
சில scene போட்டன
சில சண்டையும் பிடித்தன
பல்கலைக் கழக வாழ்க்கை முறை
கட்டுப்பாடுகளும்
கட்டுப்புத்தகங்களும்
Uniform இருந்தால் அதுவும் ஒரு பாடசாலை
ஆனால் ஒப்பிட முடியவில்லை பள்ளிக்கு
அங்கே கூடுகள் இருந்தாலும்
குடியிருக்க மனமிருந்தது
சேர்ந்திருக்க உள்ளங்களும் இருந்தது
அங்கு கோடுகள் இருந்தாலும்
அதற்குள்ளும்
பல்லாங்குழி விளையாட இடமும் கிடைத்தது
பாடங்கள் மூன்று
படிக்க ஆரம்பித்தால் நீள்கிறது
பாரதக்கதை போன்று
சரமாரியாய் காதுக்குள் தாக்கின
ஆங்கில அம்புகள்
வார்த்தைகளை தூசிதட்டி மொழிபெயர்க்கப்
பார்ப்பதற்குள் முடிந்து விட்டது Lecture
ஆங்கிலம் ஒரு கருந்துளை
அங்கு நேரம் போவதே தெரியவில்லை
மூச்சுத்திணறி சிலர் மயங்கிப் போனார்கள் – தூக்கம் –
தொலைபேசி சினுங்கல்கள்
தட்டி எழுப்பிவிட்டன
அன்று ஆடையின்றி
Amniotic fluid இல் குளித்த உடல்கள்
இன்று Formalin தொட்டிக்குள்
இரண்டையுமே உணரமுடியாது அந்த உயிரால்
சுற்றி நிற்பவர்க்கு மூச்சு முட்டுகிறது
மூளையின் ஆழத்தில் ஒரு வலி
Formalin ஆவிபட்டு முகக் கண் மட்டுமல்ல
Gloves தாண்டி அகக் கண்ணும் வலித்தது
கண்கள் கலங்கியதும்
hippocampus காண்பித்தது அம்மாவின் புகைப்படம்
கண்ணீருடன்
சமையலறையில் வெங்காயம் வெட்டிக்கொண்டு
வெள்ளைக் கோட் போட்ட சட்டத்தரணிகள்
சட்டத்தில் சாட்சிகளை கண்டுபிடிப்பது போல்
நுணுக்குக்காட்டிக்குள் தேடினோம்
கலங்களையும் கருக்களையும்
Pyloric stomach இல் முள்ளம் பன்றிகள்
Membranoun osscification வெட்டிய பாகற்காய்
Anterior pituitary பளிச்சீட்டு மின்விளக்கு
கண்களுக்கு தெரியாத அந்த உலகத்தை
குறிப்பேட்டில் வரைந்து வைத்தோம்
Histology map
எங்களுக்குள் பல காதல் கதைகள்
சில காதல் ஜோடிகள்
முளைக்காத சில காதல் விதைகள்
மட்டம் வெடிக்காத சில அரும்புகள்
வெம்பிப் பழுத்துச் சிதைந்த சில கதைகள்
தப்பிப் பிழைத்து இணைந்த சில கதைகள்
ஆப்பிழுத்து குரங்கு போல
வால் மாட்டிக் கொண்ட சில கதைகள்
இப் புது உலகில்
சிலருக்கு மட்டும் சில சொர்க்கங்கள்
மற்றவர்க்கு மனதில் மட்டும்
சில பட்டாம்பூச்சிகள்
சிலருக்கு அவை கூட வெறும் வெளவால்களாக….
அனுபவங்கள் பலகண்டு ஈராண்டு முடிந்தது
நகர்கிறது நாட்கள் வரப்போவது
மருத்துவத்தின் அடுத்த Episode
தொடரும்………….
ச. கலையூகன் – 35ம் அணி

The Cover Page of Naadi -12
This verse by Mr. S. Kalaiyukan (35th Batch), appeared in the MSU Magazine - "Naadi - 12" published in December 2014