Naadi (நாடி) The annual magazine of MSU

The Cover Page of Naadi -12

The Cover Page of Naadi -12

The MSU has released its 12th volume of Naadi (நாடி) on 21st Dec 2014 – along with the Medicos Nite. It has not been published since 2007 due to few said reasons. It will be continued in coming years also.

It is available at the canteen photocopy center in faculty for 150 /= The half of the cost is covered under HETC project.

If anybody want a copy, please call us.
– Paul Bright – 0779258008
– Thusharan – 0770790881

 Download here the Electronic Version of NAADI –  12 (2014)

 

மனதில் தெறித்த சாரல்கள்  – ஓர் ஆசிரியனாய்…

Thusaranநீண்டதொரு இடைவெளிக்குப் பின்னர் இதழ் விரித்திருக்கிறது நம்நாடி. நாடியின் துடிப்பு பலகாலம் உறங்கிக்கிடந்ததற்கு ஆயிரம் நியாயங்கள் கற்பிக்கப்படலாம்.

அதனை அலசுவதற்கு இங்கு காலமும் போதவில்லை, அது அவசியமும் இல்லை.

     “கத்தரியில் வெண்டைக்காய்

காய்த்துக் குலுங்கியதென்றால்

தத்துவத்தில் ஏதோ!

தகராறு என்று பொருள்.”

என்ற முத்தையாவின் முத்தாய்ப்புகள் தான் எனக்கு ஞாபகம் வருகிறது.

மருத்துவ மாணவர்களுக்கு மருத்துவம் தான் வாழ்க்கை அவர்களுக்குப் பல்வகைத்திறமைகள் எங்கே இருக்கப்போகிறது என்ற சிந்தனை ஓட்டத்தின் பாதிப்பே நாடியின் உயிர்நாடியாய் அமைந்தது எனலாம்.

கால ஓட்டத்தில் சிதறிய முத்துக்களாய் பரவிக்கிடந்த என் சகாக்களின் திறமையை எடுக்கவா? கோர்க்கவா? ஆரம்பம் முதல் எனக்கு எழுந்த கேள்வி இது. இயன்றவரை சேர்த்து வார்த்திருக்கிறேன். அள்ளித்தர முடியவில்லை எனக்கு. “கிள்ளித்தருகிறேன் முடிந்தால் அள்ளிக்கொள்ளுங்கள்”.

அன்புக்குரியவர்களே! இது ஆதங்கமா? அல்லது வேண்டுகோளா? எனக்குத் தெரியவில்லை. வாழ்வின் துடிப்பு எப்படி நாடியில் அடக்கமோ? மருத்துவ மாணவனின் கலைத்துடிப்புகளின் சந்தக்கோர்வையாகிறது இந்நாடி. நம் இதயத்தின் துடிப்பான இந்நாடியை எச்சந்தர்ப்பத்திலும் அஸ்தமிக்கச் செய்து விடாதீர்கள். துடிப்பதற்காய் என்றென்றும் காத்துக்கொண்டிருக்கும் இந்நாடி.

நின்று தோள் கொடுத்த சகல நல்ல உள்ளங்களுக்கும் நாடியின் நன்றிகள் சமர்ப்பணம்.

சி.துஷாரன்

இதழாசிரியர்

Nearer the front

DSC_6274It gives me immense pleasure to pin a note on this Prestigious Magazine of Medical Students that is being published after a few years.

It has been a NORMAL phenomena when we students, fill the lecture halls, tutorial rooms and practical lab benches from back to front. We rationalize it, saying that it does bring no harm to us, as far as we could see and hear from a distance.

Professor Jane Dacre* commenting on the above observation at the cultural event of 10th AGM of JMFOA, called the Jaffna Medical Students “Hello Students!Next time, sit little bit nearer the front, you will see more!”.

Doesn’t it sound more than just being called to take the benches in front? Of cause, when we fail to move towards but yet try to understand things, we neglect the fact that we miss copious amount of information. For me it is not only about at a situation where a person present something and we become audience, but also in everything we encounter; that could be subject matters, incidents around us or even the past. The urge to move a little bit nearer, at each time, will certainly keep us away from and aware of the obiter dictum that meant to be trumpery. And it is all about the involvement.

So, Next time, let us sit little bit nearer the front so that we will see more!

B.Paul Bright
President,
Medical Students’ Union.

*The Chief Guest of 10th AGM of JMFOA was Professor Jane Dacre (B.Sc. MBBS, MD, FRCP, FHEA), Professor of Medical Education, Director of Medical School, University College of London UK.

Naadi (நாடி) – 12

துணைவேந்தரின் வாழ்த்துச் செய்தி

VCமருத்துவபீட மாணவர் ஒன்றியம் நீண்ட கால இடைவெளியின் பின்னர்  “நாடி” சஞ்சிகையை வெளிக் கொண்டு வரப்படுவதையிட்டு மகிழ்ச்சி அடைகின்றேன்.

நாடி சஞ்சிகை மருத்துவபீட மாணவர்களிடையே இலை மறை காயாக இருக்கும் பல செயற்திறன் மிக்கவர்களை வெளிக்கொண்டு வர உதவும் மேலும் மாணவ மாணவிகள் தமது பாடசாலை நாட்களில் கொண்டிருந்த ஆற்றல்களை மருத்துவபீட மாணவர்களாகிய பின்னர் கல்விச் சுமை காரணமாக அழிந்து போயிருக்கலாம். அவற்றை வெளிக்கொண்டுவர இது ஏதுவாக  இருக்குமென நம்புகின்றேன்.

வெளிவரும் கவிதைகள் கட்டுரைகள் மாணவ சமுதாயத்தில் அறிவாற்றலை வெளிப்படுததிக்காட்டுவதாக அமைவது மிகவூம் முக்கியம் இணையதளம் அல்லது புத்தகங்கள் மீள்பிரதி செய்து பலவகையான விடையங்களைத் திரட்டி ஆராய்ச்சிக்கட்டுரைகளாக்கி பிரசுரிப்பது மிகவும் ஏதுவானதாக அமையும்.

பல மாணவர்கள் இரண்டாம் நான்காம் வருட இறுதி ஆராய்ச்சி செய்தவற்றைத் தொகுத்து அவற்றை கட்டுரைகளாக வடிவமைத்து வெளியிடுவதை எதிர்காலத்தில் மாணவர்கள் முயற்சித்தால் “நாடி” மிகவும் நல்ல ஒரு சஞ்சிகையாக உருப்பெறும்.

பேராசிரியர். செல்வி. வசந்தி அரசரட்ணம்

துணைவேந்தர்யாழ் பல்கலைக்கழகம்.

பீடாதிபதியின் வாழ்த்துச் செய்தி

deanமருத்துவ மாணவர் ஒன்றியம் மீண்டும் நாடி மலரினை வெளியிடுவது வரவேற்கத்தக்கது. இது ஒரு கலை இலக்கிய ஏடாக உள்ளது. மருத்துவ மாணவர்கள் எல்லத்துறைகளிலும் சிறந்து விளங்குபவர்கள் என்பது யாவரும் அறிந்த விடயம். அவர்கள் மத்தியில் பல சிறந்த படைப்பாளிகளை நான் அறிவேன். உங்கள் ஆக்கங்கள் சமூகத்திற்கு நல்லனவற்றை சொல்வனவாக இருக்க வேண்டும். உங்கள் படைப்புக்கள் சமூகத்தின் பல மட்டங்களிலுள்ளவர்களையும் சென்றடைவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். தற்கால சமூகச் சீரழிவிலிருந்தும் குறிப்பாக இளம் சந்ததியினரை மீட்பதற்கான முயற்ச்சிகளில் மருத்துவ மாணவர்கள் அண்மையில் ஈடுபட்டமை அவர்கள் சமூக சிந்தனை உள்ளவர்கள் என்பதை கொடி காட்டி நிற்கிறது. கதைகள், கவிதைகள் மட்டுமல்ல தற்காலத்திற்கு உகந்த மருத்துவ குறிப்புகளையும் இந்த மலர் கொண்டிருப்பதை எல்லோரும் விரும்புவர். பாடசாலைகளிலும், பொதுநூலகங்களிலும், சனசமூக நிலையங்களிலும் இச் சஞ்சிகை கிடைக்க வேண்டும். வாசகர் வட்டத்தை அதிகரிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு எம் சமூகத்தை நல் வழிப்படுத்துவது மருத்துவ பீட மாணவர்களின் சமூகப் பொறுப்பாகும் என்று கூறி மாணவர்களின் முயற்சி வெற்றியடைய வாழ்த்துகின்றேன்.

கலாநிதி. திரு. ச. பாலகுமார்.

பீடாதிபதி, மருத்துவ பீடம்யாழ் பல்கலைக்கழகம்.

சிரேஷ்ட பொருளாளரின் வாழ்த்துச் செய்தி

Senior Treasurerநீண்ட கால இடைவெளியின் பின் “நாடி” மீண்டும் உயிர்பெற்றுள்ளதையிட்டு பெருமகிழ்ச்சியடைகிறேன். நாடியை மீண்டும் ஆரம்பித்ததில் பெரும்பங்காற்றிய அனைத்து மருத்துவ மாணவர்களுக்கும் மருத்துவ மாணவர் ஒன்றியத்திற்கும் எனது நன்றிகள்.

நாடியின் மூலம் எமது மருத்துவ மாணவர்களின் படைப்புக்கள் எமது கல்லூரியையும் சமூகத்தையும் மேம்படுத்த எனது வாழ்த்துக்கள்.

வைத்திய கலாநிதி திருமதி. வ. அம்பலவாணர்

சிரேஷ்ட பொருளாளர்மருத்துவ மாணவர் ஒன்றியம்மருத்துவ பீடம்யாழ் பல்கலைக்கழகம்.

Some cover pages of previous Naadi Magazines