வாழ்த்தியே வழியனுப்பிடுவோம்…

 

34ம் அணி அண்ணாகள் அக்காகள் அனைவருக்கும் …

 


 எங்கெங்கிருந்தோ கூடலுற்ற

மேகங்களே…


 காலமுள் வேகமாய்

சுழன்றதுவோ கனவுகளை

தேடலுற்று பிரிந்திடவே… 

அலைபேசும் கடலோரம்

விளையாடி திரிந்தீர்…


கதைபேசி கரையோர நிழல்

மண்ணில் மடிமீது சரிந்தீர்…


கோலமிடும் வானவில்லாய்

வான்வெளியில் விரிந்தீர்…


காலங்கள் கரைந்தோட

தனித்தனியே பிரிந்தீர்…. 

உலக கோப்பைதனில் நீர் இன்று

விஞ்ஞான மேதை….


வெளிக்கண்கள் உணர்ந்திடா நீர்

அன்று வலி சுமந்த பாதை.. 

அன்றொருநாள் நதிக்கரையில


 புறப்பட்ட படகுகள் நீர்…


நட்டாற்று அலைதனிலே

தத்தளித்த காலங்கள்..


சொல்லி அழ முடியாத்துயர ஆணிகள்..


துடுப்பு அற்ற படகுகளும்


கரைசேர துணையான தோழர்கள்.. 

ஆறு வருடங்கள்

அஞ்ஞாதவாசம்..


மனதுறையும் அழுத்தங்கள்


மகிழ்வினை பங்கு போட..


துறவறம் பூணாத துறவியாய் நீவிர்….


கல்வி சுமைதனில்


தில்லை மறந்தீர்…


விழாவோ வைப்பவமோ

செல்வதை துறந்தீர்… 

வாய் மொழிப்பரிசீலிப்பு


வகையறியாத் திணறலாய்..


எல்லையற்ற பரீட்சைகளும்


வெளிக்கொணராத காயங்களும்


வேர்களாய் நெஞ்சம் துளையிடவே!!

 பார்ப்போர் கண்களில் நீரோ


 மலர் சொரியும் நந்தவனம்..


அருகில் சென்றுபார்

இதழ்விரிந்த மலர்களல்ல

மலராத மொட்டுகள் கூட

இல்லாத கடும் தரை!!! 

அரங்கேறிய காதல்

காவியங்கள்…


ஒருதலை மன ஓவியங்கள்..


கருத்தரித்த கற்பனைகள்..


மனகசப்புகள், சின்னஞ்சிறு சண்டைகள்..


அலங்கரித்த விழாக்கள்..


முடி சூடிய போட்டிகள்…


அண்ணா அக்கா பிரிந்தாலும்

அத்தனையும் நினைவிருக்கு…

 நினைவொன்று போதாதா!!


நிழல் உம்மை தேடாதா!!மருத்துவ சாணக்கியர்கள்

பிரிந்து செல்கிறார்கள்..


அடுத்த தலைமுறை விழுதுகள் நாம்


வாழ்த்தியே வழியனுப்பிடுவோம்…

                                                                          மு.அனுஜன் 39ம் அணி

<

p style=”text-align: left;”> 

Leave a Reply