நானும் மருத்துவமும்… | சர்மதா – 36ம் அணி

சின்னக் குழந்தை தனில்
சிறகடித்துப் பறக்கையிலே
சில்லென்று என் மனதில்
சிலிர்த்ததிந்த மருத்துவமே

நன்மை பல செய்து – சிலர்
நாணயமாய் வாழ்வது கண்டு
அறியாப் பருவத்தில்
அத்திவாரம் இட்டு வைத்தேன்

இன்னல் பல கண்டும்
இறையிடம் கெஞ்சிக் கொண்டேன்
இதற்காய்த்தான் காத்திருந்தேன் – என்
இறுதி மூச்சினிலும்…………

மூன்றாம் முயற்சிதனில்
மருத்துவ மாணவியானேன்
மட்டில்லா மகிழ்ச்சி கொண்டேன்
மனமகிழப் பூஜித்தேன்.

நாட்கள் புரண்டோட
நான் நினைத்த எண்ணமெல்லாம்
நொருங்கிப் போனதுவே………..
நாடிநரம்பெங்கும்
நடுங்கிக் கொண்டதுவே
பள்ளிப்படிப்பை விட
பன் மடங்கு கடினமென்று
பல்கலைக் கழகத்தை
பாவி நான் நினைத்ததில்லை.
விரிவுரை வேகங்களும்
விரைவு படுத்தல்களும்
விந்தையாய் என் மனதில்
வீரிட வைத்ததுவே.

என்னதான் செய்திடினும்
எங்கும் கிடைக்காது – எம்
விரிவுரைத் தெய்வங்களின்
விளக்க உரைகளெல்லாம்

உலகத்து மாந்தர்க்கெல்லாம்
உயிர் தனைக் கொடுத்திடும்
மருத்துவம் அறிதலும்
மாபெரும் தவமன்றோ

அருமைச் சோதரரே
அன்பு நண்பர்களே
மருத்துவத்தின் மகிமைதனை
மனமார ஏற்றிடுவோம்
மக்களுக்கும் சேர்த்திடுவோம்.
மனங்குளிர நடந்திடுவோம்

மு.சர்மதா –  36ம் அணி


The Cover Page of Naadi -12

The Cover Page of Naadi -12

This verse by Ms. M. Sarmatha (36th Batch), appeared in the MSU Magazine - "Naadi - 12" published in December 2014

 

Editor MSU

Editor of MSU

You may also like...

Leave a Reply